தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியினை வெகுவாக குறைத்துள்ள மத்திய பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கைகண்டித்து மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு முடிவின்படிமாநிலம் தழுவிய வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தின் முன் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு சங்கர் தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் பால விநாயகர் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில்15 பெண்கள் உள்பட 25 பேர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதுடன் திட்டத்தின் பெயரையே விபி-ஜி- ராம்-ஜி , த விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷின் கிராமின்என பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் தாக்கல் செய்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பிரபு சங்கர் கூறியதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதோடு மாநில அரசின் பங்களிப்பாக 60% செலுத்த வேண்டும் என கூறியிருப்பது பொருளாதாரத்தில்பின் தங்கியுள்ள மாநிலத்தில் திட்டத்தை முடக்குவதற்கான வழியாக அமைந்து விடும் மேலும் நிதி பற்றாக்குறையின் காரணமாக வேலை நடக்காது அவ்வாறு வேலை நடக்காத போது அதற்கான உள்ள பணியாளர்கள் பணி குறைப்பு செய்யப்படுவார்கள்.இதனால் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே மத்தியில் ஆளும் பாஜக அரசு பழைய முறையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் புதிய மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்கிறோம் எனக் கூறினார்.
Next Story