தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க இடம் தேர்வா?

X
Komarapalayam King 24x7 |24 Dec 2025 9:43 PM ISTகுமாரபாளையம் நகருக்குள் தலைமை தபால் நிலையம் அமைக்க இடம் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குமாரபாளையம் காந்திநகர் இரண்டாவது வீதி, பள்ளிபாளையம் ரோட்டில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது குமாரபாளையம் பொதுமக்களுக்கு மிகவும் தொலைவு என்பதால், ஊருக்குள் தலைமை அஞ்சல் ,நிலையத்தை அமைக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்தனர். பல இடங்கள் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கட்டிடம் தேர்வானதாக கூறப்படுகிறது. மாடியில் அலுவலகம் என்பதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் இந்த அலுவலகம் வர இயலாத நிலை ஏற்படும். எனவே கீழ் தளத்தில் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில், கவுண்டர்கள் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
