மோகனூரில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மோகனூரில்  தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
X
கிறிஸ்துமஸ் விழா உண்மையான அர்த்தம், அன்பு, அமைதி, பகிர்வு ஆகிய மதிப்புகளை வலியுறுத்திருக்கிறது
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மேற்கு மாவட்டம், மோகனூர் கிழக்கு ஒன்றிய த.வெ.க சார்பில் மோகனூர் , உழவர் சந்தை அருகில் உள்ள புதுத் தெருவில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஷனுஷ் (எ) மிதுன் பேசுகையில்...கிறிஸ்துமஸ் விழாவின் உண்மையான அர்த்தம், அன்பு, அமைதி, பகிர்வு ஆகிய மதிப்புகளை வலியுறுத்தி, இயேசுவை பற்றி கூறினார். இந்த நிகழ்வில் மோகனூர் பேரூர் செயலாளர் தீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள மக்களுடன் சமத்துவ கிறிஸ்துவ பண்டிகையை கேக் வெட்டி, சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மோகனூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், மோகனூர் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story