மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

X
Paramathi Velur King 24x7 |25 Dec 2025 5:28 PM IST கபிலர்மலை ஒன்றியம் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், டிச. 25: தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை திருத்தி அமைக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கபிலர்மலை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் சரவணகுமார் தலைமை வகித்தார். கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கபிலர்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என பெயர் மாற்றம் செய்யது சட்ட திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி சேர்ந்த ஒன்றியம் 20 ஊராட்சி பகுதிகளை பொதுமக்கள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜன்,பரமத்தி வேலூர் தொகுதி ஐ.டி. விங் பொறுப்பாளர் சுரேஷ்குமார், கபிலர்மலை அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தங்கமணி, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள். பல்வேறு அணி பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
