ஊர்வணி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரக் கூட்டம்

ஊர்வணி ஊராட்சியில் திமுக சார்பில் ஒன்றிய திமுக செயலாளர் பொன்கனேசன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊர்வணி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன் கணேசன் தலைமை தாங்கினார். பாக முகவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட அணி துணை அமைப்பாளர் சின்னையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவராஜ் மற்றும் பாக நிலை உறுப்பினர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊர்வணி ஊராட்சி பாகம் எண் 56 இல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தருவது எப்படி என்பது குறித்து ஒன்றிய செயலாளர் விளக்கி கூறினார்.
Next Story