தமிழ்நாடு முதலமைச்சர்க்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்த கல்லுரி மாணவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) கல்வி கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மோகனூர் அரசு பாலிடெக்னிக், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் 24 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3.04 இலட்சம் கல்வி கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை (Allied Health Science Course)-ல் இளங்கலை (இரத்த சுத்திகரிப்பு) பிரிவில் பயிலும் மாணவி பி.விபாஷினிக்கு, சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி கட்டணமாக ரூ.1.00 இலட்சத்திற்கான கசோலை வழங்கப்பட்டள்ளது.கல்லூரி மாணவி பா.விபாஷினி தெரிவித்ததாவது,என்னுடைய அப்பா வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். எனக்கு ஒரு சகோதரி உள்ளார். நான் ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வகுப்பை முடித்தேன். தற்போது நான் திருச்செங்கோடு விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனை (Allied Health Science Course)-ல் இளங்கலை (இரத்த சுத்திகரிப்பு) பிரிவில் பயின்று வருகின்றேன். எனக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (Corporate Social Responsibility Fund) ரூ.1.00 இலட்சம் கல்வி கட்டண தொகை வழங்கப்பட்டுள்ளது. இது எனது கல்லூரி படிப்பிற்கு மிகுந்த உதவியாக உள்ளது. மேலும் எனது பெற்றோரின் சுமையும் குறைந்துள்ளது. இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
