ஏரி அருகில்அரிஜனங்களுக்கு வழங்கியபட்டா நிலத்தில் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்து குடியிருக்க முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வேண்டி காத்திருக்கும் போராட்டம்
Tiruchengode King 24x7 |26 Dec 2025 9:01 PM ISTகுளத்து வலவு பகுதியில்150 ஏக்கர் ஏரி அருகில் அரிஜனங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்து குடியிருக்க முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வேண்டி காத்திருக்கும் போராட்டம் 70க்கும் மேற்பட்டோர் நடத்தினர்
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம். இலுப்பிலி கிராமம் குளத்துவலவு பகுதியில்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இலுப்பிலி கிராமம் குளத்துவ லவு அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்கப் பட்டுள்ளது.இதன் அருகில் 150 ஏக்கர் ஏரி இருப்பதால் சமீபத்தில் ஏரியை ஆழப்படுத்தியதால் கடந்த ஐந்தாண்டு காலமாகவே அதிக மழைநீர் சூழ்ந்து இப்பகுதி மக்கள் குடியிருக்க முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலைகள் சேதாரம். வீடுகள் இடிந்து விழுந்து குடியிருக்க முடியாமலும் குழந்தைகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவ் ஊரில் உள்ள இளைஞர்கள் ஊரை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாற்று இடம் வேண்டும் என அனைத்து துறை அதிகாரி களுக்கும் மனுக்கள்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பா.கவிதா தலைமையில்காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ். ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.கிட்டுசாமி.ஈஸ்வரன்.மற்றும் மூத்த தலைவர் சி.சுந்தரம்.மோட்டார் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சக்திவேல். உட்பட பகுதி பொதுமக்கள் என சுமார் 100 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டம் குறித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண் ஆகியோர் கூறியதாவது கடந்த 35 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கினார்கள் ஏரியை ஆளப்படுத்துகிறோம் என்கிற பெயரிலும் சீமை கருவேல மரங்களை அகற்றியும் ஏறி நீரை தடுத்ததும் ஆன காரியத்தால் 40 அடிக்கும் ஆழம் உருவாகியுள்ளது குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளது மேலும் மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்குகிறது சேலத்தில் மழை பெய்தால் கூட இந்த ஏரி நிரம்பி எங்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது எனவே எங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக அனைத்து அதிகாரிகள் இடத்திலும் மனு கொடுத்து விட்டோம் சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் தாசில்தார் என யாரிடம் மனு கொடுத்தாலும் கவனிப்பதாக சொல்கிறார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என தெரிவித்தனர் போராட்டம் குறித்து தகவல் அறிந்து குளத்து வலவு பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின். வட்டாட்சியர் கிருஷ்ணவேணி. வருவாய் ஆய்வாளர் கண்ணன். கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம்.காவல் ஆய்வாளர் ராதா. உதவி ஆய்வாளர் வெங்கடாசலம். உள்ளிட்டோர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். எங்களிடம் மனு கொடுத்தால் பத்து தினங்களில் நடவடிக்கை எடுத்து மாற்று இடம் வழங்குவதாக உறுதியளித்தனர். இதன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மேலும் வருவாய் கோட்டாட்சியர் லெனின் இடம் பகுதி பொதுமக்கள் சார்பில் மாற்று இடம் கேட்டு மனு .
Next Story


