முள்ளுக்குறிச்சியில் வாஜ்பாய் பிறந்த தினவிழா...

முள்ளுக்குறிச்சியில் வாஜ்பாய் பிறந்த தினவிழா...
X
முள்ளுக்குறிச்சியில் வாஜ்பாய் பிறந்த தினவிழா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுக்குறிச்சியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்த தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டச் செயலர் ஆர்.கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சியினர் பங்கேற்று வாஜ்பாய் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவப்பிரகாசம், பாஜக எஸ்டி., எஸ்டி அணி மாநில பொருளாளர் பி.வேலு, அயலக அணி மாவட்டத் தலைவர் டி.சிவக்குமார், அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.காளியப்பன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றயத் தலைவர் கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டச்செயலர் எம்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story