வேளாண்மை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

X
Arani King 24x7 |27 Dec 2025 11:46 AM ISTஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை, விதை கிடைக்கவில்லை, மானியத்தில் டிராக்டர் கிடைக்கவில்லை, செயல்படாத வேளாண் துறைக்கு திருவண்ணாமலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் வேளாண் கண்காட்சி தேவையா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாதிரி வேளாண் கண் காட்சி அமைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். .
Next Story
