தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

X
Tenkasi King 24x7 |27 Dec 2025 10:26 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 27 தென்காசி மாவட்ட சிறப்பு செய்தித் துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் மார்கழி மாத சிறப்பு பஜனைகள் நடைபெற்று வருகிறது. குற்றால அருவிகளுக்கு வரும் பொதுமக்கள் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வரத்து அதிக அளவில் காணப்படுகிறது. அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. குற்றால அருவிகளில் நீராட வரும் ஒரு சில பக்தர்கள் சோப்பு ஷாம்பு பயன்படுத்துகின்றனர். 2. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் sir வாக்காளர் திருத்த பணி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. வாக்காளப் பெருமக்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளை அணுகி ஏதேனும் குறை நிறைகளை தெரிவித்துக் கொள்ளலாம். 3. கடையநல்லூர் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மற்றும் குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது 4. கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜஹான் தெருவில் #பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது மேலும் வீட்டிற்குள்ளும் சென்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 5. தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் பகுதியில் அமைந்துள்ள கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். 6. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் இன்று இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. 7. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிந்தாமணி நாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த சமூக ஆர்வலர் சுரேஷ் விடுத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் திருப்பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8. தென்காசி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்தப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 9. தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த மாநாடு இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10. தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் அமைந்துள்ள எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்த பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் நீரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 11. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் இன்று நடைபெற்ற வாக்காளர் திருத்த பணியினை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 12. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருந்து சேரலுவிற்கு செல்லும் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல தென்காசி முக்கிய பகுதியான கூலக்கடை பஜார் பகுதியில் இருந்து கோயில் வாசல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 13. வாசுதேவநல்லூர் தனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வளங்கள் அலுவலர் தலைமையில் சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் திருத்தணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 14. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த பணிகள் குறித்த தகவல் ஒலிபெருக்கியின் மூலம் விழிப்புணர்வாக பகிரப்பட்டது. 15. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
