கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியரை இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த முதல்வர்....!

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியரை இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த முதல்வர்....!
X
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியரை அவர் இருக்கையில் அமரவைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நின்று கொண்டு கைகொடுத்து வாழ்த்திய அந்த நிகழ்வு பலரது மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியரை அவர் இருக்கையில் அமரவைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நின்று கொண்டு கைகொடுத்து வாழ்த்திய அந்த நிகழ்வு பலரது மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மரியாதையும் மனித மான்பையும் வெளிப்படுத்திய“ முதல்வர் “தலைமையின் உயர்வு ------------------------- அதிகார பதவி உயரம் அல்ல மனித மரியாதையின் உயரமே உண்மையான தலைமை என்ற உணர்வை, முதல்வரின் அந்த ஒரு செயலே வெளிப்படுத்தியது. முதல்வர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், சக அதிகாரியிடம் காட்டிய பணிவும் மரியாதையும், தமிழக அரசின் நிர்வாக பண்பாட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. பொதுவாக திறப்பு விழாக்களில் பதவி மரபுகள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் அவர்கள் அந்த மரபுகளை விட மனித மான்பை முன்னிறுத்தி, மாவட்ட நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் மாவட்ட ஆட்சியருக்கு உரிய மரியாதையை வழங்கியது பாராட்டத்தக்கது ஆகும் . இந்த நிகழ்வு, இளைஞர்களுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் “அதிகாரம் என்பது பொறுப்பும் பணிவும்தான்” என்ற வலுவான செய்தியை முதல்வர் தன் செயலின் மூலம் எடுத்துச் சொன்னது. தமிழகத்தின் ஆட்சி முறை மனிதநேயத்தையும் சமநிலையையும் அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த நிகழ்வு திகழ்கிறது. இத்தகைய நெகிழ்ச்சியான நிகழ்வுகள், மக்கள் மற்றும் ஆட்சி அமைப்புகளுக்கிடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஜனநாயகத்தின் உயிரோட்டத்தை உறுதிப்படுத்தும் என்பது உறுதி.
Next Story