தவெக சார்பில் பஞ்சப்பட்டியில் புதிய உறுப்பினர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா
Kulithalai King 24x7 |28 Dec 2025 5:13 PM ISTமாற்றுக் கட்சியை சேர்ந்த 40 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் தவெக வில் இணைந்தனர்
கரூர் கிழக்கு மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதிய உறுப்பினர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேம்புசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியிலிருந்து 40 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி முன்னிலையில் தங்களை தவெக வில் இணைத்துக் கொண்டனர். இதில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் அம்பிகா, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், புதிதாக கட்சியில் இணைந்த குணசேகரன், கோபி, மணிவேல், மணிவண்ணன் மற்றும் குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணியினர், பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400 பேருக்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவலடன் வழங்கினர்.
Next Story






