பல்கலைக்கழக தேர்வுகளில் சாதனை படைத்த டிரினிடி கல்லூரி மாணவிகள்.
NAMAKKAL KING 24X7 B |28 Dec 2025 8:52 PM ISTநாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் 2024-2025-ம் கல்வி ஆண்டில் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தங்கப்பதக்கம் பெற்றும், தரப்பட்டியலில் இடம் பெற்றும் சாதனை புரிந்துள்ளனர்.
இதில் எம். ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவு மாணவி எஸ். பிரியங்கா, முதல் ரேங்க் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பிஎஸ்சி காஸ்டியூம் டிசைன் & ஃபேஷன் பாடப்பிரிவில் எஸ். பிரதிக்ஷா, இரண்டாவது ரேங்க்-ம், கே. நித்யா, மூன்றாம் ரேங்க்-ம், பிஎஸ்சி கணிதம் பாடப்பிரிவில், டி. ஜெயஶ்ரீ ஏழாவது ரேங்க்-ம், பி. வினித்ரா, எட்டாவது ரேங்க் - ம், ஜி. ரூபனாஶ்ரீ, (பிஎஸ்சி காஸ்டியூம் டிசைன் & ஃபேஷன்) எட்டாவது ரேங்க் -ம், எம். காம். பாடப்பிரிவில் பி. சௌமியா, ஒன்பவதாவது ரேங்க் - ம் மற்றும் எம். ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவில் பி. ரசிகா, 10-வது ரேங்க் -ம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவியரை கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், துணை முதல்வர் ஆர். நவமணி, துறைத் தலைவர்கள் ஜி. கண்ணகி (ஆங்கிலம்), ஏ. பி. பவித்ரா (காஸ்டியூம் டிசைன் & ஃபேஷன்), பி. லேனா (கணிதவியல்), எம். சசிகலா (வணிகவியல்), நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் உட்பட பேராசிரியப் பெருமக்கள் பாராட்டினர்.
Next Story








