தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாள் அனுஷ்டிப்பு

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாள் அனுஷ்டிப்பு
X
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு நடந்தது.
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு நகர செயலர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் துவங்கிய மவுன ஊர்வலம், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது. பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து, மலரஞ்சலி, கற்பூர தீபாராதனை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில், விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அனைத்து பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணி, நாகராஜ், அவைத்தலைவர் ரவிக்குமார், நகர பொருளர் செல்வகுமார், நகர துணை செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story