நாமக்கல்லில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மற்றும் போதை பொருளுக்கு எதிரான நற்சிந்தனை மாரத்தான் ஓட்ட விழிப்புணர்வு போட்டி!

X
Namakkal King 24x7 |28 Dec 2025 9:26 PM ISTநற்சிந்தனை மாரத்தான் போட்டியை நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீ தேவி மோகன் மற்றும் கோவை ஜெஆர்டீ குரூப்ஸ் நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம், போதை பொருளுக்கு எதிராகவும், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நற்சிந்தனை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சர்வம் அறக்கட்டளை, மக்களோடு நாம் இயக்கம் மற்றும் நாமக்கல் நற்சிந்தனை இயக்கம் இணைந்து நடத்தும் மாராத்தான் போட்டியில் நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் மஞ்சப்பை மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நற்சிந்தனை மாரத்தான் போட்டியை நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீ தேவி மோகன் மற்றும் கோவை ஜெஆர்டீ குரூப்ஸ் ஜெ.ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாரத்தான் போட்டி நாமக்கல் -புதிய பேருந்து நிலையம் முதலைப்பட்டி பைபாஸ் சாலையில் தொடங்கி பாரதி மருத்துவமனை வரை (7 கி.மீ) சென்று திரும்பி மீண்டும் முதலைப்பட்டி ரவுண்டானா வந்தடைந்து முடிந்தது.மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.7 பிரிவுகளாக நடைப்பெற்ற போட்டிகளில் முதல் பரிசாக ₹7000 வீதம் ₹49000 பரிசு தொகையை நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனரும், அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான ஶ்ரீ தேவி பி.எஸ்.மோகன் வழங்கினார்.இரண்டு கிலோமீட்டர் முதல் 7 கிலோமீட்டர் வரை 6 பிரிவுகளில் 12 வயது முதல் 40 வயது வரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.உடல் உறுப்பு தானம் குறித்தும் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்,முதல் பரிசு ₹ 7000 ரூபாயும் இரண்டாம் பரிசு ₹ 5000 ரூபாயும், மூன்றாம் பரிசு ₹3000 ரூபாயும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன, மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ், பதக்கங்களை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சர்வம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ரம்யா ராமகிருஷ்ணன், மீனா, விவேகானந்தா கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சசிகலா, மக்களோடு நாம் இயக்கம் நிறுவனர் மனோகரன், செந்தில், அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சுதாகர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story
