குளித்தலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை கூட்டம்

குளித்தலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை கூட்டம்
X
குளித்தலை கிளை பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமை
கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. குளித்தலை கிளை சார்பாக இஸ்லாம் சம்பந்தமான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குளித்தலை கிளை பொறுப்பாளர், சையது முஸ்தபா தலைமை வகித்தார். சிறப்பு பேச்சாளர் அபுபக்கர் கலந்து கொண்டு எது ஜனநாயகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாநில செயலாளர் சபீர்அலி இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் குளித்தலை கிளை நிர்வாகிகள், இஸ்லாம் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Next Story