தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம்.

X
Pudukkottai King 24x7 |29 Dec 2025 8:21 AM ISTகல்வி மற்றும் வேலை வாய்ப்பு எங்கள் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு மாநில அரசு 5% மத்திய அரசு 10% உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு எங்கள் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு மாநில அரசு 5% மத்திய அரசு 10% உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில சங்க உயர் மட்ட குழு தலைவர் பரமசிவம் மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழகம் முழுவதும் உள்ள சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் 2025 ஆம் ஆண்டு சமுதாய மக்களுக்கு சிறப்பான முறையில் சேவைகள் செய்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக அரசு 5% மத்திய அரசு 10% உயர்த்தி வழங்க வேண்டும், தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் வாழும் மக்கள் குறித்து சாதிவாரியான கணக்கெடுப்பு முக்கியமாக காட்டுநாயக்கன் சாதிகளில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் காட்டுநாயக்கன் மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை கோரி பொது குழு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும், புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சமுதாயத்தினர் பலருக்கு காட்டுநாயக்கன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் மற்றும் வேலை தேடிக் கொண்டிருக்கும் எங்கள் சமுதாய குழந்தைகளுக்கு காட்டுநாயக்கன் சமுதாய சான்றிதழ் வழங்க வேண்டும் வீடுகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனையும் வீடு இருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story
