மைஸ்கூல் பள்ளி மாணவர் தேர்வு.

மைஸ்கூல் பள்ளி    மாணவர் தேர்வு.
X
சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கட் பால் போட்டிக்கு புதுக்கோட்டை மை ஸ்கூல் பள்ளி மாணவர் தேர்வு.
சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கட் பால் போட்டிக்கு புதுக்கோட்டை மை ஸ்கூல் பள்ளி மாணவர் தேர்வு. தமிழ்நாட்டில் இருந்து 12 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற 8வது Roller skate Basketball போட்டியானது 27.12.25 முதல் 29.12.25 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மை ஸ்கூல் பள்ளி மாணவர் பி.சாய்ரித்திக் அவருடன் , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அகில இந்திய அளவில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று இரண்டாம் இடம் பெற்று, சர்வதேச ஹாக்கி ஸ்கேட்டிங் பேஸ்கட்பால் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்த, திரு. விக்னேஸ்வரன் அவர்களும் திருமதிதீபா பிரபு அவர்களும் உடன் இருந்தனர்.
Next Story