துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
சாலை மறியல் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்
சாலை மறியல் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்
சாலை மறியல் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்
Tiruchirappalli (East) King 24x7 |30 Dec 2025 10:52 AM ISTதுவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை வரை நான்கு வழிசாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இடையில் உள்ள காரைப்பட்டியில் சுமார் 800 மீட்டர் சாலை அமைக்காமல் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியா சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறி இன்று காலை துவரங்குறிச்சி மணப்பாறை சாலை காரப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கபட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு புத்தாநத்தம் காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் மீண்டும் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.
Next Story



