மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருச்செங்கோடு மாணவ-மாணவிகள் சாதனை.

X
Tiruchengode King 24x7 |3 Jan 2026 8:24 PM ISTமாநில அளவிலான கராத்தே போட்டியில் திருச்செங்கோடு மாணவ-மாணவிகள் சாதனை. சாதனை படைத்த வீரர்களை பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பரந்தாமன் பாராட்டி வாழ்த்தினார்
ஈரோட்டில் கடந்த 28/12/2025 அன்று நடைபெற்ற கோஜீகான் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் சார்பில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டிகளில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த Eternal ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை படைத்துள்ளனர். கியோஷி மதுவிஸ்வநாத் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில், மாணவ மாணவிகள் கட்டா மற்றும் குமிதே பிரிவுகளில் வெற்றி பெற்றனர். பல்வேறு வயது உடல் எடை பிரிவுகளில் நடந்த போட்டிகளில் எட்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த ஹரி சங்கரன் நரேந்திரன், கவிதா ஸ்ரீ, தன்சிகாஆகியோர் முதல் பரிசை பெற்றனர். இதே போல் கனிஷ்கா, முகில் ஜித்தேஷ், ஹரி சஞ்சீவி, கிருஷ் பிரணவ், தருண் கார்த்திகேயன் ஆகியோர் இரண்டாம் பரிசை பெற்றனர். சங்கமி, நிரஞ்சன், நிஷாந்த் ஆகியோர் மூன்றாம் பரிசினை பெற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சாதனை வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் கராத்தே பயிற்சியாளர்கள் வினோத் ,கனிஷ்கா ,சங்கமி மற்றும் கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடுவராக (Refree) போட்டியை சிறப்பாக நடத்தினார்கள் எட்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமிதலைமை பயிற்சியாளர் சிந்தியா கே பாபு அனைவருக்கும் நன்றி கூறினார்
Next Story
