திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்விழிப்புணர்வுகலை நிகழ்ச்சி

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்விழிப்புணர்வுகலை நிகழ்ச்சி
X
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பேருந்து நிலையத்தில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வுகலை நிகழ்ச்சி நடைபெற்றது ஆடல் பாடல் நிகழ்ச்சியை திருச்செங்கோடுநகர மன்ற தலைவர் நளினி துவக்கி வைத்தார்
நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடம் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியபடி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவெங்கடாஜலபதி நாடக சபா குழுவினர் நடத்திய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.காலைக் குழுவினர் ஆடல் பாடல் மற்றும் நாடக வடிவில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு, சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு, வரி கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆகியவற்றை நடத்திக் காட்டி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்செங்கோடு துப்புரவு அலுவலர் சோழராஜ்,நகர் நல அலுவலர் டாக்டர் மணிவேல் நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் செல்விராஜவேல் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story