நாமக்கல் கட்டுனர் சங்கம் சார்பில் சேந்தமங்கலத்தில் இலவச மருத்துவ முகாம்!

X
Namakkal King 24x7 |4 Jan 2026 7:55 PM ISTஇதுவரை நடைபெற்ற 19 முகாம்களில் மொத்தம் 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் செய்யப்படுகிறது, மேலும் கடந்த வாரம் கொல்லிமலையில் நடைபெற்ற முகாமில் அதிக அளவிலான மலைவாழ் மக்கள் பயனடைந்தனர்.
சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுனர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், சேந்தமங்கலத்தில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் 20வது மருத்துவ முகாம் நடைபெற்றது .முகாமிற்கு அகில இந்திய கட்டுநர் சங்கம் நாமக்கல் மைய தலைவர் டாக்டர் பி.எஸ். டி .வி. எஸ். தென்னரசு தலைமை தாங்கினார் , எஸ்கேஎஸ் குழும நிறுவனங்களின் நிறுவனர் கே.சேகர் முன்னிலை வகித்தார்.அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மைய தலைவர் டாக்டர் பி.எஸ். டி .வி. எஸ். தென்னரசு பேசுகையில்...பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.இதுவரை நடைபெற்ற 19 முகாம்களில் மொத்தம் 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் செய்யப்படுகிறது, மேலும் கடந்த வாரம் கொல்லிமலையில் நடைபெற்ற முகாமில் அதிக அளவிலான மலைவாழ் மக்கள் பயனடைந்தார்கள் என தெரிவித்தார்.சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவம் , எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சேந்தமங்கலம் ஜிபி ஸ்ரீ குழும தலைவர் ஜிபிவி ஸ்ரீ பாலன், மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சு. சாய் பாலமுருகன், சேந்தமங்கலம் திமுக பேரூர் செயலாளர் தனபாலன்,பிஏஐ நாமக்கல் மையத்தின் செயலாளர் இளையராஜா, இணை செயலாளர் சகாதேவன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர், உடல் பரிசோதனை செய்துகொண்டனர்.
Next Story
