துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது .

X
Tiruchirappalli (East) King 24x7 |4 Jan 2026 9:49 PM ISTதுவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது .
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செவல்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பதாக துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .தகவலைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் தனேஷ் தலைமையிலான காவலர்கள் செவல்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது செவல்பட்டி சுடுகாடு அருகே இருசக்கர வாகனத்தில் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த செவல்பட்டியை சேர்ந்த ராஜீவ் காந்தி 26 என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் .மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை துவரங்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
