பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம்

X
Pudukkottai King 24x7 |5 Jan 2026 10:23 AM ISTபுதுக்கோட்டைபாஜக நிர்வாகிகள்உள்துறை அமைச்சர் உற்சாக முறை
தமிழ்நாட்டில் தாய்மார்கள் சகோதரிமார்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிய தீர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. முதலில் கருணாநிதி பிறகு மு க ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலின் என்று திட்டம் போடுகிறீர்களே உங்களுடைய கனவு மெய்யாகாது. இந்த முறை சுவற்றில் தெளிவாக இந்த சித்திரம் காணப்படுகிறது. 2026ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் அமையப்போகிறது. புதுக்கோட்டையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு... தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்று நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சார பயணம் நிறைவிழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.இந்த நிறைவிழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது. தமிழ்நாட்டில் தாய்மார்கள் சகோதரிமார்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒரே நோக்கம் என்று சொன்னால் அது முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவது மட்டும்தான் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிய தீர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. முதலில் கருணாநிதி பிறகு மு க ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலின் என்று திட்டம் போடுகிறீர்களே உங்களுடைய கனவு மெய்யாகாது. இந்த முறை சுவற்றில் தெளிவாக இந்த சித்திரம் காணப்படுகிறது. 2026ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் அமையப்போகிறது. அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி 1998ல் நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். 2019 தேர்தலில் ஒன்றாக இணைந்து களம் கண்டோம். 2021ல் கூட இணைந்தே தேர்தலை சந்தித்தோம். 2024ல் அதிமுக பாஜக தனியாகத்தான் தேர்தலை சந்தித்தோம் என்று சொன்னாலும் பாஜக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வாங்கிய வாக்குகளை பார்த்தால் 26 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருப்போம்.. மு க ஸ்டாலின் என்ன பரப்பரை செய்கிறார் என்றால் என்டிஏ அரசு நமது தொன்மையானவற்றுக்கு எதிரானது என்று பரப்புரை மேற்கொள்கிறார். என்டிஏ அரசாங்கம் தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வில் தமிழை அறிமுகம் செய்துள்ளது. ரயில்வே நிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்வதையும் மோடி தான் செய்துள்ளார். வாரணாசியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரால் இருக்கை அமைத்துள்ளார் மோடி.. மகத்தான வேகமான திருக்குறளை பாரத நாட்டின் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்வுகள் தமிழில் எழுதக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார் மோடி. நம்முடைய பாரத அரசு பிசி தீவுகளில் தமிழை கற்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மாபெரும் மகத்தான செங்கோலினை இத்தனை ஆண்டு காலம் காங்கிரஸ் மற்றும் திமுக அருங்காட்சியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். நமது பிரதமர் மோடி அதனை இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கிறார் துணை குடியரசு தலைவரான தமிழரான சிபி ராதா கிருஷ்ணனையும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார். திமுக அரசு ஊழலுக்கான எடுத்துக்காட்டு ஊழலுக்கான அடையாளமாக மாறிவிட்டது. அவர்களுடைய ஒரு அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்ற பின்னர் கூட ஏறக்குறைய 248 நாட்கள் அமைச்சராக தொடர்ந்தார் கருப்பு பணத்தில் வெள்ளையாக்குகிறார் செயல்பாட்டிலும் ஒரு தலைவரின் பெயர் சொல்லப்படுகிறது. மணல் அள்ளுவதிலும் நிலத்தடி உழலிலும் தலைவர்கள் பெயர் வந்துள்ளது. ஒரு தலைவரின் பெயர் 6000 கோடி ரூபாய் சிஆர்ஐடிபி தொடர்பு படுத்தி வெளியாகி உள்ளது. இத்தனை ஊழல்கள் நிறைந்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிக்கான முடியுமா? தமிழ்நாட்டில் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்னை கவனிக்க வேண்டும் என்ற நிலைமை நிலவுகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கை டாஸ்மாக் சாராயம் மற்றும் கடனில் தான் இயங்குகிறது... தமிழ்நாடு அரசு எத்தனை மோசமானது என்று சொன்னார் அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடக்கூடிய அவல நிலை நிலவுகிறது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரிய பெருமக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்களில் 1300 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்கள் போன்ற அரசு பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினால் அவர்கள் உடனடியாக சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயிகளை கூட சும்மா விடவில்லை. விவசாயிகளையும் ஏமாற்றுகின்றனர் கொடுமைகளுக்கு ஆட்படுத்துகின்றனர்.. திமுக அரசு தமிழ்நாட்டை எப்படி ஆக்கி இருக்கிறது என்றால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நச்சு கழிவுகளின் குப்பை கிடங்காக தமிழ்நாட்டை மாற்றியுள்ளனர். இந்து அமைப்புகளுக்கும் இந்துக்களுக்கும் முடிவு கட்டும் விதத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. அறிவிக்கப்படாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.. அவர்களுடைய மூத்த தலைவர் சனாதன தர்மத்தை என்ன சொன்னாரடெங்கு மலரியாவோடு ஒப்பிட்டார். இந்துக்கள் ஊர்வலம் என்றால் தடைவிதிக்கப்படுகிறது. நாம் திருவுருவங்களை கரைப்பதற்கு கூட தடைகள் விதிக்கின்றன. மு க ஸ்டாலினுக்கு ஒன்னு கூற வேண்டுகிறேன் அரசியல் சட்டத்தின் மாண்பை குளித்துள்ளீர்கள். பிரதமர் மோடி அரசு பல பல கட்டமைப்பு திட்டங்களை அறிவித்துள்ளது செயல்படுத்துவதற்காக அறிவித்துள்ளது. 2004 முதல் 2014ம் வரை ஆட்சி செய்தவர்களால் ஒரு லட்சம் கோடி 53 ஆயிரம் மட்டும் தான் கிடைத்தது. நான் பட்டியல் முழுவதையும் கொண்டு வந்துள்ளேன். தற்போதுள்ள ஆட்சியில் 2014 முதல் 2024வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கக்கூடிய தொகை 11 லட்சம் கோடி. 2024 தொடங்கி மாபெரும் வெற்றி பயணத்தை மோடி அரசு தொடர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு பிரியமான நரேந்திர போடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2024ம் ஆண்டு முதல் முறையாக பாஜக ஒரிசாவில் ஆட்சி அமைத்தது. அதே ஆந்திர பிரதேசத்தில் என்டிஏ அரசாங்கம் அமைக்கப்பட்டது. 2025ல் ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்டியைப்பிடித்தது. 2025ல் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்தது... 2025ல் பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி மண்ணை கவியது. 2026ல் தமிழ்நாடு மற்றும் பெங்கால் முறை. இங்கு கூடி இருக்கக்கூடிய காரிய கருத்தர்கள் ஒரு உறுதியை ஏற்றுவிட்டு இங்கு இருந்து செல்ல வேண்டும். 2024 25ல் நாடு முழுமையும் பாஜகவோடு பயணித்தது 2026ல் மேற்கு வங்கம் தமிழ்நாடு அந்த வெற்றியை பெரும்பான்மையோடு பெற வேண்டும். எனக்கு வாக்களித்தல் இதற்கு அனைவரும் தயாரா உரக்கச் சொல்லுங்கள். சார்ஜ் கோட்டையை எட்ட வேண்டும். அனைவரும் கைகளை தூக்கி தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணி வெற்றி பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பி அனைவரையும் கைகளை ஓங்க வைத்தார் அமித்ஷா பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் என முழக்கங்களை எழுப்பி அமித்ஷா உரையை நிறைவு செய்தார்.
Next Story
