குளித்தலையில் அதிமுக சார்பில் தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா

மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து சிறப்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார்நகர் அருகே குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து திமுக ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் பொய்யான திட்டங்களாக உள்ளன என விமர்சித்து பேசினார். வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும்,கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான சரவணன், கிருஷ்ணராயபுரம் தொகுதி பொறுப்பாளர் சசிகலாரவி, கரூர் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு,மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர், மாவட்ட தொழில் நுட்ப அணி இணை செயலாளர் கார்த்தி, நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் விஜயவிநாயகம், கருணாகரன், சந்திரசேகர், ரெங்கசாமி, இளங்குமரன், பேரூர் கழக செயலாளர்கள் தமிழ்செல்வன், திருப்பதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story