திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் வருகை - ட்ரோன்கள் பறக்க தடை

X
Dindigul King 24x7 |5 Jan 2026 5:31 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (புதன் கிழமை) 7-ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 7-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
Next Story
