துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூ
துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூ
துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூ
Tiruchirappalli (East) King 24x7 |5 Jan 2026 10:26 PM ISTதுவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூ
குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்தக் குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பைக் காட்டும். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வனப்பகுதியில் அதிக அளவில் தற்போது குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்குகின்றது. இவை நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை டிசம்பர் ,ஜனவரி ஆகிய குளிர்காலத்தில் மட்டுமே பூக்கக்கூடிய குறிஞ்சி பூ தற்போது அதிக அளவில் பூத்துள்ளது. இதில் இருக்கக்கூடிய தேனை தேனீக்கள் அதிகமாக விரும்பி எடுத்துச் சென்று கூடு கட்டும். கூட்டில் உள்ள தேனில் இருக்கும் சுவை வழக்கமான தேன் சுவையை விட குறிஞ்சி பூவில் இருந்து எடுக்கும் தேனின் சுவை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Next Story


