நாகனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

நாகனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
X
1150 கால்நடைகளுக்கு சிகிச்சை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் மற்றும் கன்றுகள் பேரணி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி மற்றும் உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் 250 பசு மாடுகள், 370 வெள்ளாடுகள், 20 நாய்கள், 200 கோழிகள், 310 செம்மறி ஆடுகள் என மொத்தம் 1150 கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளித்தனர். இதேபோல் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. நோய் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினர்.
Next Story