தமிழகத்திலேயே அதிக தூரம் நெடுஞ்சாலைகள் நாமக்கல் மாவட்டத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

திமுக ஆட்சியில்,தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது நெடுஞ்சாலைகள் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சேலம் ரோட்டில் உள்ள முதலைபட்டி முதல் பரமத்தி ரோட்டில் உள்ள வள்ளிபுரம் வரை புதிய ரிங் ரோடு அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் முதல் மரூர்ப்பட்டி, வேட்டாம்பாடி, வசந்தபுரம் வரை, 3 கட்டப்பணிகள் . 95.12 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி இந்த ரோடுகள் தொடக்க விழா மற்றும் வசந்தபுரம் லத்துவாடி, லத்துவாடி - வள்ளிபுரம் வரை, ரூ. 103 கோடி மதிப்பில், 4, 5ம் கட்ட புதிய ரிங் ரோடு அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நாமக்கல் அருகே வேட்டாம்பாட்டியில் நடைபெற்றது.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சரவணன் வரவேற்றார். எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்.எல் ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது தமிழக முதல்வர், தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரில் உள்ள நகரங்களில், மாநில அரசின் நிதியில் இருந்து பைபாஸ் ரோடுகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, நாமக்கல் புதிய பைபாஸ் அமைக்க அனுமதி முதல்வர் அனுமதி அளித்தார். தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரோடு அமைக்கும் தொடர்ந்து பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டது.தற்போது 3 கட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரோடுகள் திறந்து வைக்கப்பட்டது. 4,5ம் கட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள தரைப்பாலங்களை மேம்பாலமாக மாற்றவும், இருவழிப் பாதையை 4 வழிப்பாதைகளாக மாற்றவும் முதல்வர் உத்தரவிட்டார்.இந்த திட்டங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னுடைய சொந்த திருவண்ணாமலையை விட, மாவட்டம--நாமக் மாவட்டத்தில் அதிக தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் அதிக தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில்,நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.லாரி மற்றும் கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளதால், இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் கொண்டு வருவதற்கும், அவை குறித்த காலத்தில் நடைபெறுவதற்கும், ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் அச்சாணியாக இருந்து செயல்படுகிறார். அனைத்து துறை அமைச்சர்களையும் நேரில் அணுகி, திட்ட ஒப்புதல் பெற்று, பின்னர் நிதித்துறை அனுமதி பெற்று, முதல்வரிடம் சென்று திட்டத்திற்கான அனுமதியும் அவரே பெற்று வருகிறார். தமிழகத்தில், 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றை, மேம்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 1,100 தரைப்பாலங்கள், உயர்மட்ட பாலங்களாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 59 பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள, 22 பாலங்களுக்கு, நிதித்துறைக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி உள்ளோம்.தமிழகத்திலேயே, நெடுஞ்சாலைத்துறை மூலம், அதிகமான நிதியை ஒதுக்கி சிறப்பான பணியை செய்திருக்கிறோம். இந்த நன்றி உணர்வை எல்லாம் தமிழக முதல்வருக்கு பொதுமக். காட்ட வேண்டும். சீரிய திட்டங்கள் தொடர்ந்து நடைபெற, வருகிற 2026 சட்டசபை தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால்தான், மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுமீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று, திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று நாமக்கல் மாவட்டம் மேலும் வளர்ச்சியடையும் என்று கூறினார்.
Next Story