இராணிப்பேட்டையில் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

இராணிப்பேட்டையில் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு
X
இராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலூர் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 30 வாகனங்களில் அதில் 03 நான்கு சக்கர வாகனங்களும், 27 இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு இராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலூர் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 30 வாகனங்களில் அதில் 03 நான்கு சக்கர வாகனங்களும், 27 இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்கள் 12.01.2026 தேதியன்று, ஆயுதப்படை மைதானத்தில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 12.01.2026 தேதி அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணிவரை மேற்படி வாகனங்களை பார்வையிட்டு ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000/-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000/-ம் ஆயுதப்படை வளாகத்தில் செலுத்தி பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக எலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
Next Story