நாமக்கல் நாமகிரி தாயார் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்! திரளான பக்தர்கள் வழிபாடு!

X
Namakkal King 24x7 |7 Jan 2026 11:13 PM ISTஜனவரி-8 வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சந்தனக் காப்புடன் தனுர் மாத பூஜையும், காலை 9.35 மணிக்கு சந்தனக் காப்பு கலைக்கப்பட்டு, நாமகிரி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் நாமகிரி தாயாருக்கு( ஜனவரி -7) புதன்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பலர் நாமகிரி தாயாரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் நாமகிரி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.அந்தவகையில் (ஜனவரி -7) புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் நாமகிரி தாயாருக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.ஜனவரி-8 வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சந்தனக் காப்புடன் தனுர் மாத பூஜையும், காலை 9.35 மணிக்கு சந்தனக் காப்பு கலைக்கப்பட்டு, நாமகிரி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். நாமகிரி தாயாருக்கு சந்தன காப்பு விழாவுக்காக ஸ்ரீரங்கத்திலிருந்து அலங்கார மாலைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.நாமகிரி தாயாருக்கு செய்யப்படும் புனிதமான சந்தனக்காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதால் பக்தர்களுக்கு செல்வத்தையும், நல்ல திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியத்தையும் அளிக்கும் ஒரு பரிகாரமாக கருதப்படுகிறது.
Next Story
