ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்...

X
Rasipuram King 24x7 |8 Jan 2026 7:43 PM ISTஆர்.கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்...
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று(8.1.26) வியாழக்கிழமை முதல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.கவுண்டம்பாளையம் 23 எண் நியாய விலை கடையில் 935. குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக இன்று வியாழக்கிழமை 200.பேருக்கு 1.கிலோ.சர்க்கரை, பச்சரிசி, கரும்பு, வேண்டி,சேலை, ரூ. 3000. ரொக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அண்ணாதுரை, ஊராட்சி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நியாய விலைக் கடை விற்பனையாளர் மணிகண்டன், திமுக கிளை பிரதிநிதி லோகநாதன், கிளைச் செயலாளர் சதீஷ்குமார், கிளைச் செயலாளர் முருகேசன், கிளைச் செயலாளர்கள் பாபு, பெரியசாமி, துரைமுருகன், சுரேஷ், சங்கர் ஆனந்த, கில்லி-வரதராஜன், விசிக மாவட்ட அமைப்பாளர்கள் குமாரசாமி, கோபி, வரதராஜன், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, உள்ளிட்ட பல கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story
