பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி. கே.எஸ். மூர்த்தி பங்கேற்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி. கே.எஸ். மூர்த்தி பங்கேற்பு.
X
கபிலர்மலை ஒன்றிய பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பிணை கே.எஸ். மூர்த்தி பங்கேற்று வழங்கினார்.
பரமத்தி வேலூர்,ஜன.9: பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஜேடர்பாளையம், கபிலர்மலை,குரும்பலமகாதேவி, சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி,முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம், இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிணை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கபிலர்மலை மத்திய ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் சரவணகுமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம், கதிரவன் மலை ஒன்றிய பொருளாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், திருச்செங்கோடு சரக துணை பதிவாளர் சுரேஷ், பொது விநியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர் விசாலாட்சி, கள அலுவலர் சுபத்ரா, விற்பனையாளர் கிருஷ்ணன் மற்றும் சங்க பணியாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுதுறை அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story