அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம்

அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக  விழிப்புணர்வு கூட்டம்
X
குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை குறித்தும் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நெகிழி உபயோகத்தை குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். செயலாளர் விடியல் பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாசு கட்டுப்பாடு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி பங்கேற்று பேசினார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும், பிளாஸ்டிக் உபயோகம் குறித்தும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அனைத்து வணிகர் சங்க ஆலோசகர் ராமநாதன், செந்தில், சம்பத் உள்பட பலர் பேசினர். சண்முகம் நன்றி கூறினார். பிரபாகர் ஸ்ரீதர் மற்றும் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
Next Story