முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டாக பள்ளி மாணவர்களுக்காக மண்டல அளவிலான முத்தாயம்மாள் மெமோரியல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

X
Rasipuram King 24x7 |9 Jan 2026 10:23 PM ISTமுத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டாக பள்ளி மாணவர்களுக்காக மண்டல அளவிலான முத்தாயம்மாள் மெமோரியல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் பாலிடெக்னிக் நிறுவனத் தலைவர் ராமசாமி அவர்கள் நினைவாக முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டாக பள்ளி மாணவர்களுக்காக மண்டல அளவிலான முத்தாயம்மாள் மெமோரியல் ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் இடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கபடி, கோ-கோ பேட்மிட்டன், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இவ்விழாவில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கு பெற்று மாணவ மாணவிகள் பரிசுகளை வென்றனர். Kho-kho பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு மேல்நிலைப்பள்ளி முத்துக்காப்பட்டியும் இரண்டாம் பரிசு விவேகம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் சேந்தமங்கலம். 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு மகேந்திரா ஸ்போர்ட்ஸ் அகாடமி குமாரமங்கலம் இரண்டாம் பரிசும் மகேந்திரா ஸ்போர்ட்ஸ் அகாடமி குமாரமங்கலம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஏ கே வி பப்ளிக் ஸ்கூல் மல்லசமுத்திரம் பெற்றது. கால்பந்து போட்டி பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு கோல் எப்சி மல்லசமுத்திரம் இரண்டாம் பரிசு செந்தில் பப்ளிக் ஸ்கூல் இடம்பெற்றது. 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு பாரதி அகாடமி நாமக்கல் இரண்டாம் பரிசு மலர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பரமத்தி இடம்பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் இரண்டாம் பரிசு ஜெயராம் சிபிஎஸ்சி சேலம் இரண்டாம் இடம் பெற்றது. 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் இரண்டாம் பரிசு மலர் மெட்ரிகுலேஷன் பள்ளி பரமத்தி இடம்பெற்றது. கபடி போட்டி பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் அணியும் இரண்டாம் பரிசு செந்தில் பப்ளிக் ஸ்கூல் சேலம் அணியும் இடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் சென் ஜோசப் பள்ளி சேலம் முதலிடத்தையும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் இரண்டாம் இடத்தில் பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பிருந்தாவனம் ஸ்கூல் சேந்தமங்கலம் இரண்டாம் பரிசு விவேகம் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் இடம்பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி களங்காணி அணியும் இரண்டாம் பரிசு கொழிஞ்சி பட்டி டைட்டான்ஸ் அணிஇடம்பெற்றது. கைப்பந்து பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு செந்தில் பப்ளிக் ஸ்கூல் அணியும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு செந்தில் பப்ளிக் ஸ்கூல் அணியும் இரண்டாம் பரிசு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணியும் இடம் பெற்றது. 14 வயது உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஏ கே வி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மல்ல சமுத்திரம் அணியும் இரண்டாம் பரிசு லிட்டில் பிளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் சேலம் இடம் பெற்றது 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஸ்ரீ வித்யா மந்திர் ஹையர் செகண்டரி ஸ்கூல் சேலம் அணியும் இரண்டாம் பரிசு அரசு மேல்நிலைப்பள்ளி சிங்களாந்தபுரம் இடம் பெற்றது. பூப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி குமாரபாளையம் இரண்டாம் பரிசு அரசு மேல்நிலைப் பள்ளி மேட்டுப்பட்டி இடம் பெற்றது. ஏழு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி குமாரபாளையம் இரண்டாம் இடத்தை அதே பள்ளிக் கூடம் தக்க வைத்துக் கொண்டது. 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெத்தநாயக்கன்பாளையம் இரண்டாம் பரிசு அரசு மேல்நிலைப்பள்ளி பாலப்பட்டி கரூர் அணியும் இடம் பெற்றது. 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெத்தநாயக்கன் பாளையம் அணியும் இரண்டாம் பரிசு அரசு மேல்நிலைப் பள்ளி கரூர் பள்ளப்பட்டி அணியும் இடம் பெற்றது . வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த முனைவர் பா. காந்திமதி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முதன்மை கல்வி அலுவலகம் அவர்களும், முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மதிப்பிற்குரிய பிரேம்குமார் அவர்களும், வெற்றி பெற்ற அணியினருக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் இரு கல்லூரி முதல்வர்கள் அவர்களும் அனைத்து துறை தலைவர் அவர்களும் கல்லூரி நிர்வாகிகள் அவர்களும் முன்னாள் மாணவர்கள் அவர்களும் வெவ்வேறு பள்ளியிலிருந்து வந்த உடற்கல்வி ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
