கரும்புக்கு உரிய விலை கேட்டு கரும்புகளுடன் மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்!

X
Namakkal King 24x7 |10 Jan 2026 6:36 PM ISTகரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி 2021 ஆண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி கொடுத்த வாக்குறுதிப்படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000/
திமுக அரசு 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உழவர் நலத்துறை மாநியக்கோரிக்கையின் போது கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி 2021 ஆண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி கொடுத்த வாக்குறுதிப்படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000/= வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டும்.கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் திமுக அரசு இன்னும் அந்த அறிவிப்புக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை. அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கரும்பு விவசாயிகளுடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் நாமக்கல் ஆர். வேலுசாமி தலைமையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்,முன்னதாக பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சங்கத்தின் மாநில பொருளாளர் மோகன்குமார், துணைத் தலைவர் ராஜா பெருமாள், மாநில துணை பொதுச் செயலாளர் கணபதி, மகளிரணி தலைவி முத்துலட்சுமி, ஏழுமலை உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலையில் நிர்வாக சீர்கேடுகளை கலைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச் சங்கத்தின் தலைவர் ஆர்.வேலுசாமி.... கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் தர வேண்டும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு தமிழக அரசு இப்படி செய்வது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும், ஆகையினால் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும், இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.
Next Story
