தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுனர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

X
Rasipuram King 24x7 |10 Jan 2026 10:10 PM ISTதேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுனர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இராசிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்கள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு A.செல்வகுமார் அவர்கள், தி ஐ பவுண்டேஷன் சேலம், திரு கோவிந்தசாமி மேலாளர் அவர்களின் தலைமையில் டாக்டர் அஸ்வின் சேஹி மற்றும் அவர்களது மருத்துவ குழுவினர் இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தில் பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், புதிய வாகனப்பதிவு, தகுதிச் சான்று புதுப்பித்தலுக்காக வருகை புரிந்த அனைத்து ஓட்டுனர்களுக்கும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது, இம் முகாமில் சுமார் 200 ஓட்டுனர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர், இச்சிறப்பு முகாம் மூலமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி கண் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை, கண்ணாடி பொருத்துதல் போன்ற மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது, மேலும் அனைத்து ஓட்டுநர்களும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story
