இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா..

X
Rasipuram King 24x7 |10 Jan 2026 10:24 PM ISTஇலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா 10.01.2026 சனிக்கிழமை அன்று மகிழ்ச்சியாகக் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழா மாபெரும் விழிப்புணர்வோடு தொடங்கியது. சமூக ஊடகங்கள் குடிநீர் காப்போம், சாலை பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், தமிழும் பண்பாடும், சட்டம், இயற்கையைக் காப்போம். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு. பெண்ணியம் குறித்த பல்வேறு சமுக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மெட்டாலாவிலிருந்து கல்லூரி நுழைவு வாயில் வரை மாணவ-மாணவிகள் 300.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி நுழைவு வாயிலில் தமிழ் வாத்தியங்களின் முழக்கத்துடன் நாட்டுப்புற கலைஞர்கள் கரகத்தை ஏந்தி, மயிலாட்டம் மற்றும் புலியாட்டம் ஆகியவற்றை நிகழ்த்தினர். கல்லூரி நிர்வாகிகள் ஊர்வலமாக முன்னேற, மாணவ மாணவியர்கள் நடனத்தோடு கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் தமிழ் வீரத்தின் அடையாளமாக ஜல்லிகட்டு மாடு வலம் வந்தது. அதன் பின் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல வண்ண கோலங்களிட்டும். சமத்துவ பொங்கல் வைத்தும். விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டும் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் திறமையையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார் சே.ச. அவர்கள். செயலர் அருட்தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா சே.ச. அவர்கள், முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்ப்பின் டெய்சி அவர்கள் ஆகியோர் பொங்கல் விழாவின் சிறப்பினையும், தமிழரின் பழம் பெருமையையும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினர். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி சிறப்பித்தனர். கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் வழிகாட்டுதலோடு மாணவர் பேரவையினர் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்தனர். பேராசிரியர்கள் இராஜபிரபு மற்றும் ஜனனி ஜஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும் தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டி பானை உடைக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், மற்றும் நடன நிகழ்ச்சிகள், அறிவு சார்ந்த விழிப்புணர்வு நாடகங்கள், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
Next Story
