ஆரணி எஸ்.எஸ்.எஸ் மகளிர் கலைக்கல்லூரியில் கோலப்போட்டி.

X
Arani King 24x7 |11 Jan 2026 12:43 PM ISTஆரணி எஸ்.எஸ்.எஸ் மகளிர் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை பொங்கல் பண்டிகை முன்னி்ட்டு அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடைபெற்றதை பார்வையிட்ட பள்ளி நிர்வாகிகள்.
ஆரணி எஸ்.எஸ்.எஸ் மகளிர் கலைக்கல்லூரியில் பொங்கல் பண்டிகை முன்னி்ட்டு அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆரணி எஸ்.எஸ்.எஸ்.மகளிர் கலைக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கோலப் போட்டி நடைபெற்றதில் கல்லூரி நிறுவனர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் கல்லூரி முதல்வர் எஸ்.லட்சுமி வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கீதாலட்சுமி, ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் ஆரணியைச்சுற்றியுள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 9, 10. 11, 12ம் வகுப்பு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கோலப்போட்டியில் கலந்துகொண்டு குழு குழுவாக 100க்கும் மேற்பட்ட கோலங்களை வரைந்தனர். இதில் ஒவ்வொரு வகுப்பிற்கும் முதல் பரிசாக ரூ.3ஆயிரம், 2வது பரிசாக ரூ.2ஆயிரம், 3வது பரிசாக ரூ.ஆயிரம் என வழங்கப்பட்டது. இப்பரிசுத்தொகையை செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.செந்தில்முருகன் வழங்கினார். மேலும் இப்போட்டியில் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் எஸ்.சிவக்குமார் நன்றி கூறினார்.
Next Story
