நாமக்கல்லில் இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை உறுப்பினர் டி.எம்.காளியண்ண கவுண்டர் பிறந்தநாள் விழா! -நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு!

X
Namakkal King 24x7 |11 Jan 2026 6:14 PM ISTசேலம் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திற்கு டி.எம்.காளியண்ணன் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தொடா்பான கோரிக்கை மனுவை, நாமக்கல் எம்பி வி.எஸ்.மாதேஸ்வரனிடம் காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில் அளித்தாா்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் டி.எம்.காளியண்ண கவுண்டர்,இவர் இந்திய அரசியல் நிா்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்தவரும், மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், காமராஜா், கக்கன் என மூத்த அரசியல் தலைவா்களுடன் இணைந்து தேசிய அரசியலில் பயணித்தவர் டி.எம்.காளியண்ணன் 105-ஆவது பிறந்த நாள் நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு காளியண்ண கவுண்டரின் பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடா்பாளாரும், மாநில ஓபிசி பிரிவின் துணைத் தலைவர் மருத்துவா் பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி பங்கேற்று டி.எம்.காளியண்ணன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.இதையடுத்து,காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மரியாதை செலுத்தினா்.நிகழ்வில் நாமக்கல் எம்பி வி.எஸ்.மாதேஸ்வரன் பேசுகையில்... அரசியலில் தேசிய மற்றும் மாநில அளவில் பல பதவிகளை வகித்த டி.எம்.காளியண்ணன் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரா்.அவரது அரசியல் வாழ்க்கையை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா்.காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில் பேசுகையில்... தமிழக வளா்ச்சிக்கும், நாமக்கல் மாவட்ட வளா்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை, பள்ளிகளை, சாலைகளை, நூலகங்களை கொண்டுவந்தவா் காளியண்ணன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தாா். பிரெஞ்சு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றியவா். அவரது நினைவாக, சேலம் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திற்கு டி.எம். காளியண்ணன் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இது தொடா்பான கோரிக்கை மனுவை, நாமக்கல் எம்பி வி.எஸ்.மாதேஸ்வரனிடம் அவா் அளித்தாா்.இந்த நிகழ்வில் கொங்கு நாட்டு வேளாளர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம், சேலம் கொங்கு வேளாளர் நாட்டுக் கவுண்டர் நலச் சங்கத்தின் செயல் தலைவர் வரதராஜன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், கொமதேக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
