பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் மணப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம்பூ பொங்கல்வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது
மணப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம்பூ பொங்கல்வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது
மணப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம்பூ பொங்கல்வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது
Tiruchirappalli (East) King 24x7 |11 Jan 2026 8:23 PM ISTபொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் மணப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம்பூ பொங்கல்வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது
பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற இந்த தைத் திருநாளின் போது வழிபாட்டு முறைகளில் ஆவாரம்பூ முதன்மை பெற்றிருக்கும். கூழப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்டவைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்யும் நிலையில் தற்போது அந்த ஆவாரம்பூக்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்குகிறது. மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த பூக்கள் சாலையோரங்களில் உள்ள ஆவாரம் செடிகளில் அதிக அளவில் காணப்படுகின்றது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது ஆவாரம்பூ பூக்கத் தொடங்கி உள்ளது. இப்போது செடிகளில் இந்த பூக்களை காண முடியும் என்ற நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளில் இருந்து மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆவாரம்பூக்களை பறித்துச் சென்று விடுவார்கள் என்பதால் அதன் பின்னர் சில தினங்களில் ஆவாரம் செடிகளில் ஆவாரம்பூக்களை காண்பதே அரிதாக இருக்கும். பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் இந்த ஆவாரம்பூவிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story


