புதுக்கோட்டையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

X
Pudukkottai King 24x7 |12 Jan 2026 5:45 AM ISTவெல்லும்_தமிழ்ப்_பெண்கள் டொல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு
வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் டொல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு வரும் 26/1/2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் வரவேற்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு கனிம வளத்துறை அமைச்சருமான S.ரகுபதி அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை மாலையீடு கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழக மகளிர் அணி துணை செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், கழக மகளிர் தொண்டரணி துணை செயலாளர் சத்யா பழனிகுமார், சேலம் முன்னாள் மேயரும் கழக மகளிர் தொண்டரணி துணை செயலாளருமான ரேகா பிரியதர்ஷிணி, கழக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் டாக்டர் யாழனி ஆகியோர் பங்கேற்று அலோசனைகளை வழங்கினர். கழக இலக்கிய அணி துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பேரூர் வட்ட கழக நிர்வாகிகள் ,வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தவசுமணி மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அ.பிரபா தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சையது அலி பாத்திமா உள்ளிட்ட மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி நன்றி கூறினார்.
Next Story
