ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |12 Jan 2026 8:31 AM ISTநூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக இராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.
ராமநாதபுரம் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை காப்போம்*(MGNREGA BACHO SANGRAM ) என்கிற பெயரில் நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர் இராஜாராம்பாண்டியன் தலைமையில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜோதிபாலன், தெய்வேந்தின், பாரிராஜன் முன்னிலையில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக அனைத்து வட்டார,நகர, பேரூர் தலைவர்கள், மாநில,மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி தலைவர்கள், நிர்வாகிகள், பிறதுறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய தோழர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



