ராமநாதபுரம் மீனவர் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது

மீனவர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் மீனவர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மீனவர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் பணியாளர்கள் இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினார்கள்.இவ்விழாவில் சம்மேளனம் முதன்மை நிர்வாகி நா.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.முன்னதாக விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி மற்றும் இளைஞர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை அடுத்து விளையாட்டுப் போட்டிகள், உரியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று அனைவருக்கும் ஆறுதல் பரிசு அளிக்கப்பட்டது.முன்னதாக வருகை தந்த பொதுமக்களுக்கு பொங்கல் வழங்ப்பட்டது.
Next Story