முதலைப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா!

X
Namakkal King 24x7 |12 Jan 2026 6:58 PM ISTநாமக்கல் முதலைப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது அது சமயம் அன்றைய நாளில் விடுமுறை என்பதால் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகளிலும் தற்போது சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் முதலைப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் விழாவை பாரம்பரிய முறைப்படி கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் கட்டி படையல் இட்டு புது பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவிழாவை கொண்டாடினர். இது ஒற்றுமை கலாச்சாரம் பெருமை மற்றும் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.
Next Story
