ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..

X
Rasipuram King 24x7 |12 Jan 2026 7:40 PM ISTராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று (12.1.2026) திங்கட்கிழமை தமிழர் திருநாளான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் கரும்புகள் கட்டப்பட்டதோடு, மண் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பெண் வழக்கறிஞர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சேலை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. இதில் சார்பு நீதிபதி திரு.திலீப் அவர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி மோகனப்பிரியா அவர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது..
Next Story
