நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் களையப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் பழம், தேங்காய், பச்சரிசி, குண்டு வெல்லம், நாட்டுச்சக்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை, மஞ்சள் கொத்து. எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பரமத்திவேலூர் ராஜ வாய்க்கால் விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.எஸ்.செந்தில்நாதன், துணைத் தலைவர் ஒ.பி.குப்புதுரை, செயலாளர் வி.பெரியசாமி, கொமாரபாளையம் வாய்க்கால் விவசாயிகள் சங்க செயலாளர் எம்.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.சுந்தரம், தமிழக விவசாயிகள் சங்க கிளைச்செயலாளர், மூலப்பாளையம் திரு.பி.பன்னீர்செல்வம், கிளை உறுப்பினர் திரு.எஸ்.குமரவேல் ஆகியோர் வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Next Story