பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் ராமன் பகுஜன் சமாஜ் கட்சியினையும், அதன் மாநில தலைவர் Dr.P.ஆனந்தன் விமர்சித்து தவறாகப் பேசியுள்ளார் சவுக்கு சங்கர்.
தேசிய அரசியல் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியினை (BSP) 'பாத்திரகடை" என்றும் எங்களின் மாநில தலைவரை "பாத்திரக்கடைக்காரர் என்றும் தொடர்ந்து பேசி வருவதோடு இன்னும் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தி (INSTAGRAM, FACEBOOK, YOUTUBE) சமூக வலைதளங்களில் இல் பேசி இருக்கின்றார். மேலும் சென்னை காவல் ஆணையர் அருண் IPS அவர்களை ஐஸ்கிரீம் என்றும் இழிவுபடுத்தி அடைமொழி வைத்து கூறுவதும் தமிழக காவல் துறை IPS அதிகாரிகளை மனநோயாளிகள் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது. அவரை வழக்குப்பதிவு என்று கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமன் புகார் மனு அளித்தார்
Next Story



