நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் 2021-24-ம் கல்வி ஆண்டுகளில் பிஎஸ்சி கணிதம் பயின்ற கல்லூரி முன்னாள் மாணவியும், தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை அதிகாரியாக (Probationary Officer) பெங்களூர் மண்டலத்திற்கு தேர்வு பெற்றவருமான ஜெ. கமலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் முதன்மை அதிகாரியாக தேர்வு பெற்றமைக்கு அவர் செய்த முயற்சி, அதற்கான பயிற்சி, தேர்வில் வெற்றி பெறும் யுக்தி, நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளும் முறைகள் போன்றவை குறித்து மாணவியரிடம் உரையாற்றினார்.நிகழ்ச்சியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியைகள் பி. லேனா, எஸ். ஜெயந்தி, வீ. கோகிலா, எஸ். மதுக்கரைவேணி, எஸ். ரேவதி & எம். நந்தினி உட்பட கணிதவியல் துறை மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.பாரத ஸ்டேட் வங்கி முதன்மை அதிகாரியான டிரினிடி மகளிர் கல்லூரி முன்னாள் மாணவி ஜெ. கமலியை கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், துணை முதல்வர் ஆர். நவமணி, நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் உட்பட பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் பாராட்டினர்.கல்லூரி மாணவர்களுக்கான "நான் முதல்வன் திட்டம்" மூலம் பலனடைந்து பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை அதிகாரியான ஜெ. கமலிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
