ராசிபுரம் டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறையில் உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...

ராசிபுரம் டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறையில் உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
X
ராசிபுரம் டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறையில் உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் உள்ள டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 500.க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் கரும்புகளை நட்டு வைத்து, பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் தமிழர் பண்பாட்டை நினைவு கூறும் வகையில் மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். அதன் பிறகு பாட்டு போட்டி , இசைக் கச்சேரி, மாணவ மாணவிகளின் நடனங்கள், பானை உடைத்தல் , கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பொங்கலோ பொங்கல் என சத்தம் மீட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.. இதில் கல்லூரி தாளாளர், நிர்வாகிகள், பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story